“அவங்கள பார்த்தா சிரிப்பு தான் வரும்…” திருமணம் ஆனாலும் கடைசில…. நடிகை கோவை சரளா ஓபன் டாக்…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழ் திரையுலகில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். கோவை சரளா கடந்த 1979-ஆம் ஆண்டு கோவை சரளா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 63 வயதான கோவை சரளாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சமீபத்தில் அளித்த பேட்டியில் கோவை சரளா கூறியதாவது, எனக்கு திருமணம் ஆகவில்லை என்று நான் கவலைப்படவே இல்லை. திருமணம் செய்தவர்களை பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன். நான் சொன்னா கேட்க மாட்டாங்க. திருமணம் செய்தால் மட்டும் கடைசி வரை கணவர் கூடவே வரப் போறாரா? ஓடிப் போறாரோ இல்லையென்றால் இறந்து போறாரோ? எப்படியும் ஒரு நாள் போகத்தான் போகிறார். கடைசியில் நாம் தனியாகத்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.