பிரபல நடிகையான கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு கிரண் வில்லன், அன்பே சிவம், வின்னர், நியூ, ஆம்பள உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சோசியல் மீடியாவில் பிஸியாக உள்ளார். சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியாக போட்டோஸை வெளியிடுவார். இந்நிலையில் கிரண் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அங்கு ரெட் கார்பெட்டில் கவர்ச்சியாக நடந்து சென்று உலகின் கவனத்தை திருப்ப நினைத்தார். ஆனால் விசா கிடைக்காதுதால் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கிரண் கூறியிருப்பதாவது, நான் கேன்ஸ் தரப்பட விழாவுக்கு செல்ல ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு மையத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி விசாவுக்கு அப்ளை செய்தேன். ஆனால் இதுவரை அவர்கள் எந்த பதிலும் கொடுக்கவில்லை. மேலும் பாஸ்போர்ட்டையும் கூரியரில் திருப்பி அனுப்பி வைக்கவில்லை.
அங்கிருக்கும் ஊழியர்கள் பாஸ்போர்ட் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறுகின்றனர். ஒரு மாதம் ஆகியும் எனக்கு விசா கிடைக்கவில்லை. நான் 13-ஆம் தேதியே கிளம்பி இருக்க வேண்டும். ஏற்கனவே விமான டிக்கெட், ஹோட்டல் அறை புக் செய்துவிட்டேன். ஒரு மாதம் ஆகியும் எனக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை. விசா கிடைக்காததால் சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram