“அந்த பிரச்சினையால்” 15 வருஷம் காத்திருந்து கல்யாணம் செஞ்சோம்… நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!!

By Soundarya on ஐப்பசி 15, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் அறிமுகமாகி அவர் நடித்த முதல் சில படங்கள் கமர்சியல் ரீதியாக அமைந்தது. அதில் டூயட்டுக்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து தன்னுடைய ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ் நடிகை திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்த நிலையில் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.

தொடர்ந்து மாமன்னன், சைரன் என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட காலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், “என் கணவர் ஆண்டனி தட்டில் என்னுடைய பள்ளி தோழர். ஆனால் அந்த நேரத்தில் எங்கள் வேலைகளில் கவனமாக இருந்ததால் எங்களுடைய உறவை வெளிப்படுத்தவில்லை.

   

அவர் கத்தாரில் தொழில் செய்து வந்ததால் 5 ஆண்டுகள் பார்க்காமல் உறவில் இருந்தோம். நாங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதலை பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்ற பயம் எனக்குள் இருந்தது.  ஒருவழியாக 4 ஆண்டுகளுக்கு முன் என் காதல் விஷயத்தை அப்பாவிடம் சொன்னேன். ஆனால் அவர் எந்த கோபமும் இல்லாமல் காதலை ஏற்றுக்கொண்டார். பின்  திருமணம் நடந்தது, அவருக்காக 15 வருடங்கள் காத்திருந்தேன்” என்று கூறியுள்ளார்.