தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் திறமையை மெருகேற்றிக்கொண்டே சென்று தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அம்மா அப்பா இருவருமே சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால் இவர் குழந்தையாக இருக்கும்போதே நடிக்க தொடங்கியுள்ளார். பிறகு படிப்பை முடித்து மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், விஜய் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த தன்னை சினிமாவில் முக்கிய நடிகையாக முத்திரை பதித்து கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தற்போது தான் நடிப்பில் மட்டும் சிறந்தவள் அல்ல தனக்கு வேறு திறமைகளும் உள்ளது என்று அவர் நிரூபித்துள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்பு அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கு நடந்த கார் ரேஸ் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளார்.

மற்ற கார் ரேஸ் வீரர்களுடன் அமர்ந்து நிபுணர்களின் அறிவுரையை கேட்பது மற்றும் கார் பந்தயத்திற்கு தயாராவது உள்ளிட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்து உள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பல ஆண்டுகளாக கார் மற்றும் பைக் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவர் கேட்டுக் கொடுக்கும் விதமாக கார் பந்தயத்தில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
