கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!

By Nanthini on புரட்டாதி 8, 2024

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

 

இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிறகு தமிழில்  கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரகு தாத்தா திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கேரளாவில் நடைபெறும் கேரளா கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராக மாறியுள்ளார்.

இந்த அணியின் உரிமையாளர் சுரேஷ் கிருஷ்ணா. தற்போது இந்த போட்டிகள் கேரளாவில் நடந்து கொண்டிருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து கேரளா கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அணிகள் உருவாகியுள்ளது.

KCL கேரள கிரிக்கெட் போட்டிக்கான அம்பாசிடராக நடிகர் மோகன்லால் செயல்படுகிறார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அணி இன்று நடைபெற்ற போட்டியில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அது தொடர்பான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.