பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரகு தாத்தா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான துபாய் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கேரளாவில் நடைபெறும் கேரளா கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொண்ட அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு 15 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். மாத வருமானம் மட்டுமே 35 லட்சம்.

இவர் ஒரு படத்திற்கு நான்கு கோடியும் விளம்பரங்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையும் சம்பளம் வாங்குகிறார். ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 25 லட்சம் சம்பாதிக்கிறார். சென்னையில் ஒரு வீடு, ஹைதராபாத்தில் ஜூபிலி ஹீல்ஸ் பகுதியில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன. மேலும் பல விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார். இப்படி நடிப்பு மட்டுமல்லாமல் பல வழிகளில் வருமானம் ஈட்டி வரும் கீர்த்தி சுரேஷின் நிகர சொத்து மதிப்பு 41 கோடி என கூறப்படுகிறது.திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராக மாறியுள்ளார்.
