திருமணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்.. கவர்ச்சியை வாரி இறைக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on பங்குனி 30, 2025

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

 

இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை சமீபத்தில்  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.