மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை காயத்ரி, இந்த நிகழ்ச்சியின் மூலம் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினார்.அதைத்தொடர்ந்து சின்னத்திரை சீரியலிலும் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலா என்ற கேரக்டரில் முதல் முதலாக நடித்தார். அதன் பிறகு, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதைத் தொடர்ந்து காயத்ரிக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அரண்மனை கிளி, சித்தி 2, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்தி வீடு, மெல்லத் திறந்தது கதவு என பல சீரியல்கள் நடித்துள்ளார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடித்துள்ளார்.

சினிமா துறையில் வலம் வந்த காயத்ரி டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 12 வயதில் தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. எப்போதுமே Instagram பக்கத்துல ஆக்டிவாக இருக்கும் காயத்ரி யுவராஜ் அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்தும் அப்லோட் செய்து வருவார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இணையத்தில் பதிவிட்டார். இதற்க்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசையோடு காத்திருப்பதாகவும் இவர்கள் கூறி இருந்தனர். அதுபோலவே இவருக்கு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. 12 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது என்று உருக்கமாக காயத்ரி யுவராஜ் பதிவிட்டு இருந்தார்.

அந்த பெண் குழந்தைக்கு யுகா என்ற பெயரையும் வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை தற்போது காயத்ரி தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு பலரும் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

