நம்ம ‘கயல்’ ஆனந்தியா இது…? மாடர்ன் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் போட்டோஷூட்…

By Begam on கார்த்திகை 12, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

   

இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சண்டிவீரன் மற்றும் மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

   

 

இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி உள்ளார் கயல் ஆனந்தி.  சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை மட்டும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம கயல் ஆனந்தியா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.