தமிழ் சினிமாவில் மூத்த நடிகையான கவிதா சமீபத்தில் கொடுத்திருந்த போட்டியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கவிதா. இவர் ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித் நடித்த முதல் படமான அமராவதி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவர் அண்மையில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி எடுத்திருந்தார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது ஓ மஞ்சு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது நான் போக மாட்டேன் என்று அழுதேன்.

சரி படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஸ்கூலுக்கு போகலாம் என்று நினைத்தபோது எனக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .அதனால் படிக்க செல்லாமல் நின்று விட்டேன். ரஜினியுடன் பல படத்தில் சேர்ந்து நடித்ததால் ரஜினிக்கும் எனக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டது என அப்போது பத்திரிக்கையில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்போது நான் மோகன் பாபு உடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

மேக்கப் மேன் தான் அந்த செய்தியை என்னிடம் கூறினார். நான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால் மோகன் பாபு வருத்தப்பட்டார். நாங்கள் அனைவரும் அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று பொய்யான செய்தியை ஏன் போடுகிறீர்கள் என்று சண்டை போட்டோம். அந்த பத்திரிக்கை தவறை ஏற்றுக்கொண்டு தங்களிடம் மன்னிப்பு கேட்டது. இந்த செய்தி எங்கள் வீடு வரை சென்று வீட்டிலிருந்து போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
