அடுத்தடுத்து மரணமடைந்த கணவர், மகன்… 3 முறை தற்கொலை முயற்சி… கண்ணீருடன் கதறி அழுத 90’ஸ் பிரபல நடிகை (வீடியோ)…

By Begam on அக்டோபர் 28, 2023

Spread the love

90 களில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கவிதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என போன்ற மொழிகளில் 350க்கும் க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் அறிமுகம் கவிதா தன்னுடைய 11வது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

 

   

இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மஞ்சு’ என்ற ஒரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். அதே ஆண்டில்’ ஸ்ரீ ஸ்ரீ மூவா’ என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையில் கலக்கிய இவர், சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கினார். நடிகை கவிதா சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி போன்ற சீரியல்களிலும்,  ஜீ தமிழில் ஒளிபரப்பான  ‘என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

   

 

இப்படி தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவரின் மறுபக்கம் மிகவும் சோகம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இவரின் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது நடிகை கவிதாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருந்தனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தனது கணவரையும் , மகனையும் அடுத்தடுத்து இழந்தார் நடிகை கவிதா.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘ என்னுடைய கணவருக்கு இப்படி ஆகும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற இரண்டு நாட்களிலேயே மகன் உயிரிழந்தான் அடுத்து சில நாட்களில் என்னுடைய கணவரும் உயிர் இழந்துவிட்டார். என்னுடைய கணவரும் மகனும் இறந்த நேரத்தில் நான் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்றும்,  நான் உயிரோடு இப்ப வரைக்கும் வாழ்வதற்கு காரணம் எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது தான்.’ என்றும் உருக்கமாக கூறியுள்ளார். இதோ அவரின் மனதை கலங்க வைத்த பேட்டி…