Categories: சினிமா

ஒரே நாளில் 132 கோடி நஷ்ட்டம்.. மகன், கணவரை காவு வாங்கிய கொரானா.. தற்கொலைக்கு முயன்ற கவிதாவின் உருக்கமான பக்கங்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தவர் கவிதா. சிநேக் பாபு கேரக்டரில் வடிவேலு நடித்திருந்த படத்தில், நடிகர் மாதவனுக்கு அம்மாவாக நடித்திருப்பார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை கவிதா கூறியதாவது, நான் வசதியான வீட்டில் பிறந்தவள் என்றாலும், கட்டிய புடவையோடு வர வேண்டும் என்று என்னை திருமணம் செய்தார் என் கணவர். 1983-84ல் ஒரு பவுன் நகை 280 ரூபாய்க்கு வித்த போது எனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு நகைகளை பெட்டி, பெட்டியாக என் கணவர் வாங்கிக்கொடுத்தார். ஒருமுறை என்வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் ரெய்டு வந்தனர். அத்தனை வரவு செலவுகளுக்கும் சரியாக கணக்கு வைத்திருந்து, அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் என் கணவர் செலுத்தியிருந்ததை பார்த்து அதிகாரிகள், என்னிடம் பலமுறை ஸாரி கேட்டுவிட்டுச் சென்றனர்.

ஒருமுறை வீட்டுக்கு வந்த அவர் சிக்கன் செய்ய சொன்னார். திடீரென மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவமனையில் கொண்டுபோய் அவரை சேர்த்தோம். மூளை செயல்பாடு பாதித்த நிலையில், கோமா ஸ்டேஜ்க்கு போய்விட்டார். அத்தனை பிரபல நரம்பியல் நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில், அவர் நினைவு திரும்பினார். என்னை கவி, கவி என அழைத்தார். சில மாதங்களில் அவர் பூரண குணமாகி விட்டார். பழையபடி வியாபாரம் பார்த்தார். வெளியில் சென்றுவந்தார். பிறகு ஒருநாள் அவரிடம், எதற்காக அன்று திடீரென்று உங்களுக்கு அப்படி ஆனது என்று கேட்டபோது, முதன்முறையாக அவர் அழுதார். ஒரே நாளில் 132 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. உன்னை, பிள்ளைகளை எல்லாம் தெருவுக்கு நான் கொண்டுவந்து விட்டேன் என்ற வேதனையில் அப்படி ஆகிவிட்டது என்றார்.

அதனால் என்ன குடிசையில் வாழலாம் என்று அவரை அழைத்தேன். நம்பிக்கை கொடுத்தேன். 132 கோடி ரூபாய் நீங்கள் சம்பாதித்ததுதானே, அந்த பணத்தை விட நீங்கள் முக்கியம் என்று ஆறுதல் சொன்னேன். அதன்பிறகு 18 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்துவிட்டு மறைந்து போனார். எங்களுக்கு சொந்தமான 3 வீடுகளை விற்றுவிட்டு நான் மாதம் 2200 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். ரிக்‌ஷாவில் வெளியில் சென்றிருக்கிறேன். ஏழ்மைை, வறுமையை கண்டு எப்போதும் நான் வருத்தப்பட்டது இல்லை. ஒரு கட்டத்தில் இயக்குநர் மணிவாசகம் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால், மீண்டும் ரீ என்ட்ரி ஆகி, அம்மா அக்கா கேரக்டர்களில் இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என கூறியிருக்கிறார் நடிகை கவிதா.

admin

Recent Posts

“வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது”…. சனி மகா திசை உங்களை கோடீஸ்வரர் ஆக்குமா அல்லது சோதிக்குமா?… இதோ உங்க ராசியை செக் பண்ணுங்க….!

வேத ஜோதிடத்தில் சனி பகவான் 'கர்மகாரகன்' என்று போற்றப்படுகிறார். நாம் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை…

5 minutes ago

“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…

12 minutes ago

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

17 minutes ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

22 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

27 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

34 minutes ago