Connect with us

17 வயதில் 2-வது திருமணம், 35 வயதில் கேன்சர்.. அவர் இறந்து என்ன காப்பாத்திட்டு போயிட்டாரு.. எமோஷனலாக பேசிய கௌசல்யா செந்தாமரை..

CINEMA

17 வயதில் 2-வது திருமணம், 35 வயதில் கேன்சர்.. அவர் இறந்து என்ன காப்பாத்திட்டு போயிட்டாரு.. எமோஷனலாக பேசிய கௌசல்யா செந்தாமரை..

 

பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகை கௌசல்யா செந்தாமரை தனது கணவர் குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் கௌசல்யா. இவர் முதன்முதலாக எம்ஜிஆரின் நாடக கம்பெனியில் நடிக்க தொடங்கி அதன் பிறகு சினிமாவிற்குள் நுழைந்தவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா என்ற சீரியலில் பாட்டி கேரக்டரில் நடித்திருந்தார்.

   

அதை தொடர்ந்து தற்போதும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் தான் செந்தாமரை. எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் தொடங்கி ரஜினி, கமல் காலம் வரை பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியை இவரை யாராலும் மறக்க முடியாது. நடிகர் செந்தாமரையின் வசனம் மற்றும் அவருடைய முகபாவணையை பார்த்து பலரும் மிரண்டு போவார்கள்.

இப்படி பல பாராட்டுகளுக்கு சொந்தக்காரரான இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். முதலில் மேடை நாடகம் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பார். ரஜினியின் நண்பராக இருந்த இவர் பல திரைப்படங்களில் ரஜினியுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் செந்தாமரை தன்னுடைய 57 வயதில் மாரடைப்பு காரணமாக மரணமானார். கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவர் இறந்து போனார்.  இவரின் மனைவிதான் கௌசல்யா செந்தாமரை. இவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது ஆரம்பத்தில் சிவாஜியின் நாடக நிறுவனத்திலும், எம்ஜிஆரின் நாடக கம்பெனியிலும் நடித்து வந்தார் செந்தாமரை. அப்போதுதான் எனக்கும் அவருக்கும் அறிமுகமானது.

முதலில் பார்க்கும்போது பார்ப்பதற்கு ரவுடி போல் இருக்கிறார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் புத்தகங்களை படித்துக் கொண்டே இருப்பார். எனக்கும் புத்தகங்கள் எல்லாம் பிடிக்கும் என்பதால் நானும் புத்தகம் படிப்பேன். அப்போது நான் புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது அதை பார்த்த செந்தாமரை அந்த புத்தகத்தை வாங்கி நான் படித்துவிட்டு தரவா என்று கூறினார்.

நானும் சரி என்று சொல்ல அவர் புத்தகத்தை படித்து முடித்துவிட்டு என் வீட்டிற்கு வந்து கொடுத்தார். என் வீட்டில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு ரவுடி போல் இருக்கிறார் என்று கூறி அவரை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி விட்டார். பின்னர் கௌசல்யாவுக்கு செந்தாமரைக்கும் பழக்கம் ஏற்பட தொடங்கியது. ஆரம்பத்தில் கௌசல்யாவின் தோழி நடிகை லலிதா இருவருக்கும் காதல் பாலமாக இருந்திருக்கின்றார்.

வீட்டில் அவரை திருமணம் செய்து வைக்க மிகப்பெரிய போராட்டமே நடந்தது. ஆனால் திருமணமான முதல் நாளே இருவருக்கும் சண்டை தொடங்கியது. என்னை எப்போதும் மிக பாசமாக அம்மா என்று அழைப்பார். என் பெயரை சொல்லி ஒரு நாளும் அவர் அழைத்ததே கிடையாது, நான் பலமுறை கூட கேட்டிருக்கிறேன்.  எனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டபோது என்னை எண்ணி பலமுறை அழுது இருக்கின்றார்.

நான் சிகிச்சை எடுத்துக் கொள்ள மாட்டேன் நான் இறந்தாலும் பரவாயில்லை என்று கூறியபோது சரி நீ இறந்து போ ஆனால் சிகிச்சை எடுத்துக்கொண்டு இறந்து போ, நீ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இறந்து விட்டாய் என்று யாரும் கூறக்கூடாது. சிகிச்சைக்கு செல் என மிக அன்போடு என்னை சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். 17 வயது இருக்கும் போது எனக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது .

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். மூன்று மகன்கள் இருந்த நிலையில் நான் இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. 35 வயது இருக்கும் போது தான் எனக்கு மார்பக புற்று நோய் வந்தது. அதிலிருந்து நான் மீள்வதற்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் என் கணவர் தான் . அவர் என்னை பிழைக்க வைத்து விட்டு அவர் இறந்து போய்விட்டார் என்று பேட்டியில் உருக்கமாக பேசியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top