தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி மற்றும் பிரபுதேவா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கவிதா என்ற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று அவர் மாற்றிக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார்.
திருமணம் செய்து கொண்டு கணவன் மற்றும் குழந்தை என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை எனவும் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக கௌசல்யா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கௌசல்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் குண்டாக இருப்பதாக வெளியான புகைப்படங்கள் உண்மை எனவும் அந்த சமயத்தில் தான் 105 கிலோ எடை அதிகரித்ததாகவும் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/shorts/dPuAGP5F2Wo?feature=share