தமிழ்நாட்டுல அரசியல் அடிப்படை தகுதியே 2 பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றதா…? நடிகை கஸ்தூரியின் X பதிவு வைரல்…!!

By Devi Ramu on ஆவணி 30, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன் 50-வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ராமதாஸ் மருத்துவராக வேலை பார்த்த போது அவரிடம் நற்சாக வேலை பார்த்து சுசிலாவுடன் பழக்கம் ஏற்பட்ட காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பலருக்கும் ராமதாஸுக்கு இரண்டாவது மனைவி இருப்பது தெரியாது.

ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்கு கட்சி பொறுப்புகளை கொடுப்பதற்காக தான் ராமதாஸ் ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடி அதன் புகைப்படங்களை பகிர வைத்துள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

   

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டில அரசியல் அடிப்படை தகுதியை இரண்டு பொண்டாட்டி மெயின்டைன் பண்றது தான் போல. அட போங்கய்யா. இங்கே எத்தனை பிள்ளைகளோ? கட்சியை யார் யார் எத்தனை கூறு போட போறாங்களோ” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு வைரலாகி வருகிறது.