கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட பிக் பாஸ் பிரபலம்… அவரே வெளியிட்ட புகைப்படம்… வருத்தத்தில் ரசிகர்கள்….

By Begam on மாசி 22, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991இல் தமிழ் சினிமாவில் ‘ஆத்தா உன் கோயிலிலிலே’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

   

தற்பொழுது நடிகை கஸ்தூரி தன்னுடைய பக்கத்தில் தமிழக அரசியல் பற்றியும், இந்திய அரசியல் பற்றியும் அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகிறார். மேலும் சின்னத்திரை விவாதங்களில் பங்கேற்று அதிரடி கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

   

 

இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் கஸ்தூரி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும்  பங்கேற்றார். இதன்மூலம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். இவர் மாநில அளவில் ஒரு ஹாக்கி வீராங்கனையும் கூட.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் எப்பொழுதும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

தற்பொழுது இவர் தான் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது முகத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை காட்டியபடி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

இதோ இந்த புகைப்படங்கள்….