விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வில்லி நடிகை.. சீரியல்ல ட்விஸ்டே இவங்கள வச்சு தான்..!

By Mahalakshmi on ஜூலை 13, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கண்மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. சன் டிவி சீரியல் முதல் இடத்தில் இருந்தாலும் அவ்வபோது விஜய் டிவி சீரியலும் டாப் இடத்திற்கு வரும்.  சன் டிவியும் விஜய் டிவியும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

   

   

நேற்று வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. பல வாரங்களாக முதலிடத்தை பிடித்திருந்த சிங்க பெண்ணே சீரியல் தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

ஆரம்பத்தில் அந்த சீரியல் அந்த அளவுக்கு பிரபலமாக விட்டாலும் தற்போது காவேரி மற்றும் விஜயின் காட்சிகளை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை மக்கள் விடாமல் பார்த்து வந்தார்கள். அந்த சீரியலில் புது நடிகை ஒருவர் என்ட்ரி  கொடுக்கப் போகின்றார். அதாவது விஜய் வெண்ணிலா என்ற பெண்ணை காதலித்ததாக காவிரியிடம் கூறியிருப்பார்.

அந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது ஒரு முன்னணி பிரபலமாக அறிமுகமாக இருக்கின்றார். அவர் யார் என்றால் கண்மணி மனோகரன். விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அதைத்தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பெரிய அளவு சீரியலில் தென்படாத இவர் சமீபத்தில் தான் பிரபல தொகுப்பாளரான அஸ்வந்த் என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் மகாநதி சீரியலில் என்ட்ரி  கொடுத்திருக்கின்றார். இதனால் இனி கதை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.