Categories: சினிமா

அப்பாவால் திசைமாறிப்போன நடிகை கனகாவின் வாழ்க்கை… பலவருடங்கள் கழித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை தகவல்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த இந்த ஒரே படத்தில் மிக பெரிய நடிகையாகி விட்டார் நடிகை கனகா.  ‘கரகாட்டகாரன்’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

  

நடிகை கனகாவின்  சொந்தப் பெயர் லட்சுமி பிரியா. ஏடி தேவதாஸ் மற்றும் நடிகை தேவிகாவுக்கு பிறந்தவர் தான் நடிகை கனகா. கனகா 1973 இல் தான் பிறந்திருக்கிறார். கனகா குழந்தையாக அதுவும் மூன்று மாதமாக இருக்கும்போதே அவருடைய அப்பா அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். அப்பாவுடைய அரவணைப்பு இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிடைத்ததே இல்லை.

இவருடைய அம்மா தான் இவரை முழுமையாக பார்த்து வளர்த்திருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் இப்போது ராமராஜன் நடித்த கரகாட்டம் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அந்த திரைப்படத்தில் இவர் நடிக்கக் கூடாது என்று இவருடைய அப்பா அதிக அளவில் பிரச்சினை செய்துள்ளார். ஆனாலும் கங்கை அமரன் இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.


இந்த நிலையில் இவருடைய அம்மாவின் இறப்பு இவரை அதிகமாக பாதித்துவிட்டது. அம்மா மட்டுமே தனக்கு உலகம் என்று நினைத்துக் கொண்டிருந்த கனகாவின் அம்மாவின் இறப்பு இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் நடிகை கனகா.

தற்பொழுது இவர்  மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் நடிகை கனகாவை அவர் இருக்கும் இடத்தில் சென்று சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், வெளியிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதன்மூலம் தான் தற்பொழுது ரசிகர்கள் இவரின் நிலை பற்றி தெரிந்து கொண்டுள்ளனர்.

Begam

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

15 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

19 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

27 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

38 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

46 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

1 மணத்தியாலம் ago