தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த இந்த ஒரே படத்தில் மிக பெரிய நடிகையாகி விட்டார் நடிகை கனகா. ‘கரகாட்டகாரன்’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடிகை கனகாவின் சொந்தப் பெயர் லட்சுமி பிரியா. ஏடி தேவதாஸ் மற்றும் நடிகை தேவிகாவுக்கு பிறந்தவர் தான் நடிகை கனகா. கனகா 1973 இல் தான் பிறந்திருக்கிறார். கனகா குழந்தையாக அதுவும் மூன்று மாதமாக இருக்கும்போதே அவருடைய அப்பா அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். அப்பாவுடைய அரவணைப்பு இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிடைத்ததே இல்லை.

இவருடைய அம்மா தான் இவரை முழுமையாக பார்த்து வளர்த்திருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் இப்போது ராமராஜன் நடித்த கரகாட்டம் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அந்த திரைப்படத்தில் இவர் நடிக்கக் கூடாது என்று இவருடைய அப்பா அதிக அளவில் பிரச்சினை செய்துள்ளார். ஆனாலும் கங்கை அமரன் இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் இவருடைய அம்மாவின் இறப்பு இவரை அதிகமாக பாதித்துவிட்டது. அம்மா மட்டுமே தனக்கு உலகம் என்று நினைத்துக் கொண்டிருந்த கனகாவின் அம்மாவின் இறப்பு இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் நடிகை கனகா.

தற்பொழுது இவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் நடிகை கனகாவை அவர் இருக்கும் இடத்தில் சென்று சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், வெளியிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதன்மூலம் தான் தற்பொழுது ரசிகர்கள் இவரின் நிலை பற்றி தெரிந்து கொண்டுள்ளனர்.
