கனகா சினிமாவை விட்டு விலகி, முடங்கிப் போனதற்கு இது தான் காரணம்.. ஓப்பனாக சொன்ன நடிகர் சரத்குமார்..

By Mahalakshmi

Published on:

நடிகை கனகா, பிரபல முன்னணி நடிகை தேவிகாவின் மகள் ஆவார். 1989 ம் ஆண்டில்  “கரகாட்டம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த முதல் திரைப்படத்திலேயே கனகா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, கார்த்திக், மோகன்லால் மம்முட்டி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். நடிகை கனகா 2007 ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த முத்துக்குமார்  திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் திருமணமான 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகின. அதன் பின்னர் மூன்று ஆண்டு காலமாகவே முத்துக்குமாரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் நடிகை கனகாவும் இறந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் அவரே ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகை கனகா சில காரணங்களால் பல வருடங்களாக அவர் வீட்டைவிட்டு  வெளியே வராமல் தனிமையாக இருந்து வருகிறார், அதற்கான காரணமும் தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் சரத்குமார், கனகா குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி, சினிமா மீது அவர் அதிக காதலை கொண்டிருந்தார்.

ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் அவர் மனதில் ஒரு அழியாத காயத்தை ஏற்படுத்திவிட்டது. சினிமாவில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

author avatar
Mahalakshmi