தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான கல்யாணி தனக்கு 7 வயதில் நடந்த கொடுமைகளை பற்றி முதன் முறையாக பேட்டியில் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. ஜெயம் திரைப்படத்தில் சதா அவர்களுக்கு தங்கையாக நடித்திருப்பார். இவர் தனது 15 வயதில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர், தாயுமானவர் போன்ற பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். சினிமாவில் சீரியல் மட்டும் இல்லாமல் தொகுப்பாளினி என தொடர்ந்து பிஸியாக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.

தற்போது கணவருடன் சென்னையில் செட்டிலாகி இருக்கும் கல்யாணி அடிக்கடி சில பேட்டிகளில் கலந்து கொண்டு பேசுவார். அதில் தன் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார். 7 வயது முதல் 26 வயது வரை நடித்து வந்த இவருக்கு ஒரு மிகப்பெரிய சேனலில் இருந்து தொகுப்பாளனி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது ஒரு ஆங்கர் தன்னை பாருக்கு வருவீர்களா என்று கேட்டிருக்கிறார்.

இவர் முடியாது என்று கூற மீண்டும் அழைப்பு வரவில்லையாம். அதேபோல் நான் ஹீரோயினியாக நடித்த போது அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று எனது அம்மாவிடமே கேட்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தனது ஏழு வயதில் ஒரு பாடகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதை குறித்து தனது அம்மாவிடம் கூட நான் தெரிவிக்கவில்லை .

திருமணம் முடிந்து தனது கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் தனது கணவரை அழைத்து தனக்கு 7 வயதில் நடந்த சில துன்பமான சம்பவங்களை அவரிடம் தெரிவித்தேன். முதன்முறையாக அப்போதுதான் அந்த சம்பவம் குறித்து மனம் திறந்தேன். அவர் தற்போது மிகப்பெரிய இசையமைப்பாளராக இருக்கிறார். அவரது பெயரை நான் கூற விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
