நான் ஹிந்தியில் பேச வேண்டுமா..? சட்டென கடுப்பான நடிகை கஜோல்… வைரலாகும் வீடியோ..!!!

By Soundarya on ஆவணி 7, 2025

Spread the love

பாலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்தான் கஜோல். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் அவர் தன்னுடைய தாய் தனுஷாவோடு கலந்து கொண்டார். கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவருடைய இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு கௌரவ பிரதான ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கஜோல்.

பத்திரிகையாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் ஹிந்தியில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் கடுப்பான கஜோல், “சட்டென்று கோபத்தில் இப்பொழுது நான் ஹிந்தியில் பேச வேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்ற கருத்தை பதிவு செய்துவிட்டு கிளம்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.