‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை போல சூர்யாவை எனக்கு ஒரு நாள் மட்டும் தாங்கனு கேட்ட ரசிகை.. ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா?

By Priya Ram

Updated on:

முன்னணி நடிகையான ஜோதிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, ரஜினிகாந்த், விக்ரம் ஆகியோருடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

   

90’ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவி என்ற மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

நீண்ட காலத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு சூர்யா ஜோதிகா தம்பதியினர் தங்களது மகன் மகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்த நிலையில் ஜோதிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அதனை பார்த்த ரசிகை ஒருவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவை ஒரு நாள் விட்டுக் கொடுப்பது போல் எனக்கும் விட்டு தருவீர்களா? நான் அவரது மிகப் பெரிய ரசிகை என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ஜோதிகா எதார்த்தமாக oops not allowed என பதில் அளித்துள்ளார். அந்த பதிவு நெட்டிசன்களால் தற்போது அதிகம் பகிரப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

author avatar
Priya Ram