விஜய் என்னை பார்த்து அப்படி சொன்னார்.. தளபதி குறித்து ரகசியத்தை பகிர்ந்த நடிகை ஜோதி மீனா..

By Deepika

Updated on:

 

உள்ளத்தை அள்ளித்தா படம் இன்றும் மக்கள் கொண்டாடும் காமெடி படமாக உள்ளது. இதில் கவுண்டமணி ஜோடியாக நடித்த நடிகை ஜோதி மீனாவை மறக்க முடியாது. இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் ஆடிய அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.

   
jyoti meena in ullathai allitha

இவர் நடிகை ஜோதி லட்சுமியின் மகள் ஆவார், இவர் தந்தை ஒரு ஒளிப்பதிவாளர் அதனாலேயே இவருக்கு திரைவாய்ப்பு எளிதாக கிடைத்தது. நடிகை ஜோதி மீனாவை பொறுத்த வரை சரத்குமாரின் படமான ரகசிய போலீஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார். இதனை அடுத்து இவருக்கு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிளமராக நடித்து தமிழக இளசுகளின் கனவு கன்னியாக மாறினார்.

Actress jyoti meena

அத்தோடு அழகிய நாட்கள், கோபாலா கோபாலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த இவர் அஜித் குமார், பிரபு, சரத்குமார் போன்ற உச்சகட்ட நடிகர்களோடு இணைந்து நடனமாடி உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கக் கூடிய இவர் பல படங்களில் 1995 முதல் 2001 வரை நடித்திருக்கிறார்.

Jyoti meena and vijay

இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர், விஜய்யுட நடனமாடியது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விஜய்யுடன் நடனம் ஆட பயந்தேன், விஜ்ஜயுடன் கவாலி டான்ஸ் ஆட வேண்டும் என்று சொன்னார்கள். இந்த டான்ஸ் எனக்கு ஆட தெரியாது. இதனை அடுத்து இந்த நடனத்தை பயிற்சி செய்து ஆடலாம் என்று நினைத்த போது விஜய் வருவாரா? என்று கேட்க விஜய் வரமாட்டார். நீங்கள் தான் சரியாக ஆட வேண்டும் ஏனென்றால் உங்களுடைய பகுதி தான் அதில் அதிகளவு உள்ளது என்று கூறினார்கள்.

Jyoti meena and vijay

மனதுக்குள் பல்வேறு பயம் இருந்த சூழ்நிலையில் சரி என்று முதல் நாள் சென்று ரிகர்சல் செய்துவிட்டு மறுநாள் ஷூட்டிங்குக்கு சென்றேன். அப்போது சோலோவாக ஆடிய பொழுது விஜய் என்ட்ரி செய்த பின்பு ஏதோ குசு குசுவென்று பேசி படி வந்தார்.

Vijay

இதனை அடுத்து விஜய் என்ன சொன்னாரோ ஏதோ என்று பயத்தோடு இருந்த நான் அவரிடம் சென்று என்னை பார்த்து அப்படி என்ன பேசினீங்க என்று கேட்க உங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்பதைத்தான் நான் பேசினேன் என்று கூறினார். இந்த பேச்சைக் கேட்டு தற்போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

Vijay and jyoti meena

மேலும் தன் நடனத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தக் கூடிய தளபதி விஜய் தன்னுடைய நடனத்தை சிறப்பாக இருக்கிறது என்று சொன்ன விஷயத்தை நாசுக்காக சொன்ன ஜோதி மீனாவின் ஓபன் டாக் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

author avatar
Deepika