கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினியாக தமிழ் சினிமாவில் இருந்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளவர் தான் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமலேயே இருந்தார்.
அதன் பிறகு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ஒரு சரியான கம்பேக் கொடுத்தார். பெண்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இந்த திரைப்படம் அமைந்தது. அதனைத் தொடர்ந்து ராட்சசி மற்றும் காற்றின் மொழி என அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படி பிசியாக சினிமாவில் நடித்து வரும் ஜோதிகா தனது பிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். 40 வயதை கடந்தாலும் தற்போதும் அவர் இளமை குறையாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்காக கடும் உடற்பயிற்சிகளை செய்து வரும் ஜோதிகா, சுதந்திர நாள் விழா ஒன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவராக மாறுவோம் என்று அறிவுரை கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…