ஹாலிவுட் ஹீரோயின் போல நியூ லுக்கில் நடிகை ஜோதிகா… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைத்துறையை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

இவர்  நடிப்பில் வெளியான ‘உடன்பிறப்பே’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இறுதியாக மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக  ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகா தற்பொழுது நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த பாலிவுட் நட்சத்திரங்களின் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த லேட்டஸ்ட் நியூ லுக் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)