பரபரப்பாக நடைபெற்று வரும் தேர்தல்… நம்ம ஜோதிகா மட்டும் vote போடாம எங்க போயிருக்காங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து, தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா.

இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே. திரைப் பிரபலங்களும் , பொதுமக்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் நேபாலுக்கு சுற்றுலா சென்று, என்ஜாய் பண்ணும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ ஜோ vote போடாம இங்க என்ன பண்றீங்க..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)