நடிகை ஜெயப்பிரதாவுக்கு ரூ.5000 அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை… என்ன காரணம்?… நீதிமன்றம் உத்தரவு..!!

By Nanthini on ஆவணி 12, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் ஒரு காலத்தில் இருந்தவர் தான் நடிகை ஜெயபிரதா. கிட்டத்தட்ட முப்பது வருட கால திரைப்பட தொழிலில் இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.

   

இந்நிலையில் இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீடு கழகத்தில் செலுத்தவில்லை என்ற தொழிலாளர்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு காப்பீடு கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

   

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.