CINEMA
நடிப்பை தாண்டி பிசினஸில் களமிறங்கிய நடிகை இனியா.. இந்த ஐடியா பிரமாதமா இருக்கே..!!
பிரபல நடிகையான இனியா தமிழ் மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார். கடந்த 2019-ஆம் தமிழில் ரிலீசான பாடகசாலை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக இனியா நடித்திருந்தார். இனியாவுக்கு பெரும் புகழை தேடி தந்தது வாகை சூடவா திரைப்படம். இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றது. அதன் பிறகு அருள்நிதிக்கு ஜோடியாக மௌனகுரு திரைப்படத்தில் இனியா நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை, மாசாணி உள்ளிட்ட படங்களில் இனியா நடித்துள்ளார். இந்த நிலையில் நடிப்பு மட்டுமில்லாமல் பிசினஸிலும் இனியா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார். இனியாவின் குரு அருள் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோவின் இணை நிறுவனராக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் துபாயில் இருக்கும் சர்வதேச வர்த்தகம் மையத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில் இனியாவும் அவரது டான்ஸ் குழுவினரும் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இனியா அனைவரும் ரசிக்கும் விதமாக விருது வழங்கும் நிகழ்ச்சியை நேர்த்தியாக இயக்கியுள்ளார். இதன் மூலம் நிகழ்ச்சி டைரக்டராகவும் இனியா அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடனத்துறையில் பாரம்பரிய மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் வீடியோ சிறந்து விளங்குவதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேடை நிகழ்ச்சிகள் விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், பிராண்ட் அறிமுக விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் என பல விதமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வமுடன் செயல்படுகிறது. அத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ கலையை அதன் உண்மை வடிவத்தில் மக்களிடையே கொண்டு சேர்க்க ஒரு பாலமாக செயல்படுகிறது. இந்த ஸ்டுடியோ இந்தியா மற்றும் மலேசியா என சர்வதேச கிளைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.