‘பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனது ஒரு குத்தமா’…? பூர்ணிமாவின் கல்லூரி தோழி இந்துஜாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் தற்பொழுது வரை 10 போட்டியாளர்களுக்கும் மேல் வெளியேறி உள்ளனர்.

  

   

அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 60 நாட்களையும் நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பூர்ணிமா. இவருக்கென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். யூட்யூப் பிரபலமான இவர் தற்பொழுது நன்றாக இருந்த தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் இணைந்து செய்யும் வேலைகள் ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறது. இதனால் அவர் மக்களுக்கு மத்தியில் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த பூர்ணிமாவின் நெருங்கிய தோழி இந்துஜா பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது குறித்து அவர் வேதனையுடன் புலம்பி அழுத விடியோக்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் ‘என்னவோ நடக்குது. எனக்கு தெரியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். ஆனால், என்னிடம் அவள் சரியாக பேசவே இல்லை. வெளியில் நடப்பதை குறித்து நான் அவளிடம் கேட்கவே இல்லை. ஆனால், அவள் என் கண்ணை பார்த்து கூட பேசவில்லை. ஏதோ தப்பாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவள் என்னை பார்த்தால் எப்படி நடந்து கொள்வாள் என்று எனக்கு தெரியும்.

 

View this post on Instagram

 

A post shared by I N D (@indhuja_ravichandran)

இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு மாதிரியாக இருக்கேன். வெளியிலிருந்து தெரிந்த முகம் உள்ளே வரும்போது எனக்கு வெளியில் என்ன நடப்பது என்று சொல்ல தேவையில்லை. எனக்கு ஆறுதலாக பேசினால் நன்றாக இருக்கும்.’என புலம்பி கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகை இந்துஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவரது பதிவில், நெட்டிசன்கள் பலவாறு  விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவின் screenshot…