கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘இதயத்தை திருடாதே’. இந்த சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து.
இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் சீசனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாவது பாகமும் ஒளிபரப்ப, இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றியடைந்தது.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை ஹீமா பிந்து ஆந்திராவைச் சேர்ந்தவர்.
இவருடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தது என்பதால் அவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது. இதனால் கல்லூரி படிக்கும் போதே ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படம் என இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்தார்.
இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர். இதன் மூலம் தான் இவருக்கு கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இவர் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹீமா பிந்து.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.