பிரபல நடிகையான ஹன்சிகா கடந்த 2007-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ரிலீசான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹன்சிகா ஹீரோயினாக தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் முன்னணி நடிகர்களான விஜய், கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்டருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபாரான சொஹைல் என்பவரை கடந்த 2022-ஆம் ஆண்டு ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், 15 மினிட்ஸ், மை நேம் இஸ் சுருதி, கார்டியன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படங்கள் வெற்றி பெறவில்லை. சமீபகாலமாக ஹன்சிகா நடிக்கும் படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறுவது இல்லை.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் ஹன்சிகா பிஸியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் ஹன்சிகா தனது கணவருடன் இணைந்து புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதன் கிரகப்பிரவேசத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது புதிய தொடக்கம் என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title
