கேன்சர்னு எங்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான்.. கண்ணீருடன் விடீயோ வெளியிட்ட நடிகை.. இவருக்கும் இளையராஜா குடும்பத்துக்கும் இப்படி ஒரு உறவா..?

By Archana

Published on:

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47. கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

Snapinstaapp 422681627 1109989213339977 2231485827839166569 n 1080 1

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

   
24 65b27d1daa2e0

இந்த நிலையில், இளையராஜாவின் மனைவி ஜீவாவின் சகோதரி மகளும், பாடகியும், டப்பிங் கலைஞருமான விலாசினி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தங்களுக்கு தெரியும் எனவும், சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கைக்கு அழைத்து சென்றதாக கூறியதாகவும், இன்னும் சிகிச்சைக் கூட ஆரம்பிக்கவில்லை என்ற தகவல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கூட தன்னால் கலந்து கொள்ள முடியாது எனவும், தான் அமெரிக்காவில் சிக்கி இருப்பதாவும் கண்ணீர் மல்க விலாசினி வீடியோ வெளியிட்டுள்ளார்.

author avatar
Archana