நடிகை கௌதமி ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் தொகுப்பாளர், இப்போது இருக்கும் ஜெனரேஷனில் காதல் தோல்வி அடைந்தால் விபரீத முடிவை கூட எடுக்கின்றனர். அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. அதிலிருந்து விடுபடுவதற்கான காரணம் என்ன என கேட்டார். அதற்கு பதிலளித்த கௌதமி, ஒரு இளம் வயதில் காதல் தோல்வி நடக்கும் போது அதிக உணர்ச்சிகரமாக தோன்றும்.
இந்த ஸ்டேஜ் வரைக்கும் நீங்க தான் வந்திருக்கீங்க. நீங்க வாழ்க்கையில எவ்வளவு சாதிச்சு இருக்கீங்க. 15 வருஷம் ஸ்கூல்ல நீங்க சாதிச்சு இருக்கீங்க. நீங்க ஒரு பெரிய போர் வீரர். நீங்க எல்லாத்தையும் கடந்து வந்திருக்கீங்க. உங்க மனசு, சுதந்திரம் என எல்லாத்தையும் இன்னொருத்தர் கிட்ட கொடுத்துட்டீங்க. இதுதான் உங்க லைப் என்று நீங்கள் நம்பிக்கையோட இருந்திருக்கீங்க.
அப்படி இருக்க அந்த காதல் தோல்வியில் முடிந்தால் அதை நல்ல அனுபவமாக எடுத்துக்கணும். வேதனை இருந்தாலும் அந்த வலியில் ஒரு நல்லது தேடலாம். நீங்க ஒரு கவிஞரா இருந்தா கவிதை எழுதலாம். உங்களுக்கு புத்தகம் படிக்க பிடிச்சிருந்தா புத்தகம் படிங்க. அதிக நேரம் டிராவல் பண்றது புடிச்சிருந்தா எங்கயாவது ட்ராவல் பண்ணுங்க. உங்க உறவு முடிந்தது. அதனை ஒரு நல்ல மெமரியா எடுத்துக்கணும்.
நீங்க அதுல இருந்து ரெக்கவர் ஆகி பிரச்சனை இல்லாமல் ஸ்ட்ராங்கா இருக்கணும். அதுக்கு அப்புறம் காதலை ஒரு மெமரியா நினைச்சு சிரிச்சுக்கலாம். இப்ப காதல் தோல்வியில் இருந்தால் அந்த சூழ்நிலைகளில் இருந்து பிரேக் எடுத்து அந்த இடத்திலிருந்து கிளம்பிடுங்க. வாழ்க்கையில ஒரு மாற்றத்தை கொண்டு வாங்க. அப்படி இருந்தால் மைண்ட் கண்டிப்பா மாறும். நடந்தது எதையும் பெயிலியரா நினைக்க கூடாது. அது எல்லாமே ஒரு அனுபவமா எடுத்துக்கணும் என கவுதமி கூறியுள்ளார்.
View this post on Instagram