எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இன்னும் அப்படியே இருக்காங்களே… இணையத்தில் வைரலாகும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஹாசினியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….

By Begam

Published on:

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

   

தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது.

இத்திரைப்படத்தில் ‘ஹா ஹா ஹாசினி’ என்று இவர் தனது பெயரை சொல்லும் விதமே தனி அழகு தான். இதைத்தொடர்ந்து தமிழிலும் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி  குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் இவர் தற்பொழுது Gorgeous லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.