தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் அதிக திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ஜெனிலியா. விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் நடித்து அசத்தலான என்று கொடுத்தார். தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கின்றார்.
தென்னிந்தியாவில் டாப் நடிகையாக இருந்து வந்த நடிகை ஜெனிலியா. 2012 ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் மூக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஜெனிலியாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title