பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு திருமணம் ஆகிடுச்சா…? கணவர் இவர்தானா…? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்…!

By Begam on புரட்டாதி 26, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் 2019 இல் வெளியாகிய வெற்றி படங்களில் ஒன்று பிகில். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தளபதி விஜய் இரண்டு வேடங்களில்  நடித்திருப்பார்.

   

அதில் மைக்கில் கேரக்டர் ஒன்று. மைக்கில் கேரக்டர் கால்பந்தாட்ட பயிற்சியாளராக காட்டப்படும்.

   

 

இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். தளபதி விஜய்யிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா ரவிச்சந்திரன், அம்ரிதா ஐயர்,

ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர், வர்ஷா பொல்லம்மா மற்றும் காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை காயத்ரி ரெட்டி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விட்டார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காயத்ரி ரெட்டி.  இவர் தற்பொழுது தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.