“கோடி கோடியாய் சொத்து.. பவர் ஆப் அட்டர்னி கொடுத்ததால் வந்த வினை”… கௌதமி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்… ED நடத்திய மாஸ் ஆபரேஷன்….!

Spread the love

பிரபல பழம்பெரும் நடிகை கௌதமியின் சொத்துகளை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அமலாக்கத் துறையினர் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கௌதமி, தன் திரையுலகப் பயணத்தின் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை மையமாக வைத்து இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு கௌதமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, தனது சொத்துகளைப் பராமரிப்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை ‘பவர் ஆஃப் அட்டர்னி’யாக நியமித்தார். ஆனால், இதனைப் தவறாகப் பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்த கௌதமியின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளைத் தங்களது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து 2023-ஆம் ஆண்டு கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், மகன் சிவா உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

தற்போது இந்த நில மோசடி வழக்கில் பெருமளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இன்று காலை முதலே சென்னை மற்றும் மதுரையில் அழகப்பனுக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் காவல்துறையின் விசாரணையைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

13 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

10 மணத்தியாலங்கள் ago