கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய வேட்டையன் நடிகை.. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on அக்டோபர் 12, 2024

Spread the love

தமிழில் குறைந்த அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அதன்படி தமிழில் குறைந்த திரைப்படங்களில் நடித்த தன் மீது பெரும் கவனத்தை குவிக்கும் அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகை துஷாரா விஜயன்.

   

இவர் முதன்முதலில் போதை ஏரி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் மூலம் சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த பட வாய்ப்பு நோக்கி போராடிக் கொண்டிருந்தார்.

   

 

அதன்படி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மக்கள் மத்தியில் அவருக்கு தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்கன், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதேசமயம் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.