#image_title
சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் கடைசி வரைக்கும் ஒன்றாக சேர்ந்து வாழும் பிரபலங்கள் குறைவு தான் என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் கேளடி கண்மணி சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னவ் சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். சீரியல் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது திவ்யா தான் அர்னவை பார்த்துக்கொண்டதாக சில பேட்டிகளில் கூறியிருந்தார். அதன் பிறகு மீண்டும் அர்னவுக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் திவ்யா கர்ப்பமானார். அர்னவ் திவ்யாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதற்கு இடையே செல்லம்மா சீரியலில் நடித்த அன்சிதாவுக்கும் அர்னவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டி திவ்யா தனது கணவரை விட்டு பிரிந்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. கணவர் துணை இல்லாமல் திவ்யா ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். தனியாளாக தனது குழந்தையை வளர்த்து வருகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் தான் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் திவ்யா தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கணவர் அடிக்கும் போது மனைவி திருப்பி அடித்து, நீ அடிச்சா வாங்கிட்டு போற பொண்ணு நான் இல்ல என்ற தனுஷ் பட காட்சியை ரீ கிரியேட் செய்து ரீல்ஸ் போட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த அடி அர்னவுக்கு தானே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…
தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 18-வது முதலமைச்சராகப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு…
மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…