தவறாக நடந்து கொண்ட நபருக்கு… தர்ம அடி கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை… என்ன நடந்தது தெரியுமா?….

By Begam on வைகாசி 29, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில்சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் குடும்பமாக அனைவரும் கலந்து டைனிங் டேபிளில் சிரித்துக் கொண்டிருக்க, அங்கு வரும் கோபி ‘என்ன ஜோக் என்று சொன்னால் நானும் சிரிப்பேன்’ என்று கூறி டைனிங் டேபிளில் அமர்கிறார்.

   

உடனே எழில் ‘ராதிகா’ என்று கூற, ‘அய்யோ நான் ஒன்றும் செய்யவில்லை. சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன்’ என்று கூறி பதறுகிறார் கோபி. இதை கண்டவுடன் அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இவ்வாறு இன்றைய வாரத்தின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

   

 

தற்போது இத்தொடரில் பாக்கியலட்சுமியின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் செல்லம்மா, கேளடி கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது திவ்யா கணேஷ் தான் வாழ்வில் நடந்த மோசமான சம்பவம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது ‘படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமான பயணத்தின் போது பின் சீட்டிலிருந்து ஒருவர் அவரின் மீது கை வைத்துள்ளார். அதை அறிந்த திவ்யா அவரை பயங்கரமாக அடித்ததாக பேட்டியில் கூறியுள்ளார். இதுபோன்று தவறாக நடப்பவர்களை சும்மா விடக்கூடாது” என்றும் கூறியுள்ளார் நடிகை திவ்யா கணேஷ்.