‘அந்த நடிகர் என்னை அக்கா-னு சொன்னது என் மனசுக்கு கஷ்டமாயிடுச்சு’… பிரபல 80’ஸ் நடிகை டிஸ்கோ சாந்தியின் வைரலாகும் பேட்டி…

By Begam on ஆவணி 9, 2023

Spread the love

70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

   

வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார். இறுதியாக 1996-ம் ஆண்டு துறைமுகம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார் டிஸ்கோ சாந்தி.

   

 

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். 1996 -ம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரை திரைத்துறையிலிருந்து விலகினார் டிஸ்கோ சாந்தி. இவரது கணவர் ஸ்ரீஹரி தமிழ்,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் போலீஸாக நடித்து மாஸ் காட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகை டிஸ்கோ ஷாந்தி திரைவாழ்க்கை குறித்த சில அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் கமலஹாசனுக்கு அடுத்ததாக தனக்கு நடிகர் அரவிந்த் சாமியை மிகவும் பிடிக்கும் என்றும்,

மேலும் நடிகர் சூர்யாவின் கண் தனக்கு பிடிக்கும் என்றும், அவர் ஒரு சமயம் தன்னை அக்கா என கூப்பிட்டது தன் மனதுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ….