ஸ்லீவ்லெஸ் சேலையில் வீடியோ வெளியிட்டு… பசங்க மனசை பந்தாடும் நடிகை திவ்யா துரைசாமி… கியூட் வீடியோ…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவர் முதன்முதலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார். படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்து வந்தது.

dhivya31

இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இதைத்தொடர்ந்து பாண்டிராஜ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. அதுவரை கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.

   

இவர் படங்களைத் தவிர கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரிலும், 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் வெளியிட்ட கியூட் வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)