சேலையில் இம்புட்டு கவர்ச்சியா?.. ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்..!

By Nanthini on சித்திரை 16, 2025

Spread the love

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. அந்த சீரியலை தொடர்ந்து செந்தூரப்பூவே சீரியலில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

ஆனால் அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த புகைப்படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருந்தாலும் இவருக்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு.

   

 

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அங்கு அவரால் பிரகாசிக்க முடியாமல் போனதால் போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது இவரின் கைவசம் மெடிக்கல் மிராக்கள் என்ற திரைப்படம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து தர்ஷா குப்தா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது போட்டியாளராக சென்ற இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இவர் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே திரும்ப வந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.