நான் பிறந்தது மும்பை… ஆனால் எனக்கு தமிழ்நாடு தான் எல்லாமே…. ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தை முன்னிட்டு, பெண்களைக் கௌரவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் இந்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் நடிகை தேவயானி கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். அதில், திரைத்துறையில் தனக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து  பேசினார். பெண்களின் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பாராட்டி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய அவர், நான் பிறந்தது என்னவோ மும்பை. ஆனால் நான் இப்போது என்னவா இருக்கேனோ அது இந்த தமிழ்நாடு தந்தது. தமிழ்நாடு ரொம்ப அழகான பூமி. பாதுகாப்பான பூமி. பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பூமி என்று பேசியுள்ளார்.