விஜய் படத்துல நான் நடிச்ச மொத்த சீனையும் தூக்கிட்டாங்க.. காரணம் இதுதான்.. நடிகை தேவதர்ஷினி எமோஷனல்..!

By Nanthini on ஐப்பசி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாகவும் காமெடி நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் முதல் முதலில் தமிழ் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பார்க்கப்பட்டார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட தேவதர்ஷினி அடிக்கடி கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த குணச்சித்திர நடிகையாக தற்போது மாறி உள்ளார்.

   

இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். முதன்முதலில் மர்மதேசம் என்ற தொடரில் நடித்த நடிகையாக மாறிய தேவதர்ஷினி பிறகு அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களிலும் நடித்து பிரபலமானார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பொன்னியின் செல்வன் மற்றும் கண்ட நாள் முதல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காஞ்சனா படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

   

 

சினிமாவில் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக இருந்த போதே 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகரான சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நியதி என்ற ஒரு மகளும் உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவின் தோழியாக நடித்திருப்பார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் தான் நடித்த மொத்த காட்சிகளையும் தூக்கி விட்டதாக கூறி வருத்தப்பட்டுள்ளார். அதில், மெர்சல் படத்தில் நான் நடித்த மொத்த காட்சிகளையும் எடுத்துட்டாங்க.

படத்தின் ஃப்ளாஷ் பேக் கிட்டத்தட்ட 45 நிமிடம் வரும். சில காட்சிகளை நீக்கிய பிறகே அவ்வளவு நிமிடம் வந்ததால் முக்கிய காட்சிகளை மட்டும் வைத்துவிட்டு தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு படக்குழு ஆளாகியதால் என் காட்சிகளை நீக்கி விட்டதாக கூறினர். மெர்சல் படத்தில் விஜய் உடன் தான் நான் நடித்த காட்சிகள் இருக்கும். விஜய் இருக்கும் ஊருக்கு ஊசி போடுவது போல நான் வருவேன், அவருக்கு தான் ஊசி போடுவதாக நினைத்து அவர் பயந்து கொள்வார், பிறகு அவருடைய பையனுக்கு என்று கூறியதும் போங்க என்று கூறிவிட்டு செல்வார். இன்னும் சில காட்சிகள் அவருடன் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த காட்சிகளை நீக்கி விட்டனர் என்று தேவதர்ஷினி பேட்டியில் கூறியுள்ளார்.