Connect with us

நாங்கள் தாசிகளாகவே இருக்கிறோம் ; நடிகை தீபா அதிரடி

CINEMA

நாங்கள் தாசிகளாகவே இருக்கிறோம் ; நடிகை தீபா அதிரடி

 

கோலிவுட்டில் கவனிக்கப்படும் குணசித்திர நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தீபா சங்கர். கடைக்குட்டி சிங்கம், டாக்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். இவரின் எதார்த்த பேச்சும், வெகுளித்தனமும் இவரின் அடையாளம்.

Deepa shankar about women life in society

   

அப்படிப்பட்ட தீபா, சமீபத்தில் ஒரு பெட்டியில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. இவர்கள் பெண்கள் பற்றியும், நடிகைகள் பற்றியும் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றிருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது, “எங்களை யாரேனும் ஏமாற்றிவிட்டால்கூட அவன் இன்னைக்கு வருவான் நாளைக்கு வருவான் என்று காத்துக்கொண்டு இருக்க வேண்டுமா.. நாங்கள் மனித பிறவிகள் கிடையாதா?.. எங்களுக்கு உணர்வுகளோ, உணர்ச்சிகளோ கிடையாதா?..

 

ஆண்களுக்கு மட்டும்தான் எல்லாம் இருக்க வேண்டுமா?.. கணவர் அடித்தால் வெளியே சொல்லாதே, காவல் நிலையத்துக்கு போனால் அவமானம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். என்னை மாதிரி நடுத்தர வாழ்க்கை வாழும் பெண்களுக்காகத்தான் நான் பேசுகிறேன். இளம்வயதில் கணவரை இழந்த ஒரு பெண் யாருடனாவது போய்விட்டால் அவருக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள். நீங்கள் நான்கு பேர் சேர்ந்து அவருக்கு மறுமணம் செய்து வையுங்களேன். ஏன் அதை செய்யவில்லை.

Deepa shankar emotional interview

நாங்கள் பாட்டு பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்கக்கூடாது. இதெல்லாம் உங்களுக்கு கௌரவ குறைச்சல். சின்ன சின்ன ஆசைகள் எங்களுக்கும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? நாங்கள் தாசிகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த நிலைக்கு அப்படி மாற்றிய நீங்கள் யார். ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார். நாங்கள் தாசிகளே ஆனாலும் நடித்து எங்கள் பிள்ளைகளை காப்பாற்றிவருகிறோம். உங்களைப் போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லையே. யார் குடும்பத்தை கவனிக்கவில்லையோ, பெண்களை மோசமான நிலைமைக்கு தள்ளுகிறானோ அவனைத்தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது.

பெண்கள் இளக்காரமாக போய்விட்டார்களா. எவ்வளவு கஷ்டப்பட்டு பெண்களை பாதுகாக்கிறோம். வேலைக்கு செல்ல வேண்டும், குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது எப்போது வேண்டுமானாலும் காதல் வரலாம். அது தவறே இல்லை. அது எனக்கும் என்னை நேசிப்பவருக்கும் இடையே உள்ள விஷயம். அதை வைத்து எனது கேரக்டரை தீர்மானிக்கக் கூடாது” என்றார்.

author avatar
Deepika
Continue Reading
To Top