#image_title
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. இவர் நடித்த புது வசந்தம் படத்தை யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் விக்ரமனின் முதல் படமான புதுவசந்தம் படத்திலேயே வலுவான கேரக்டரில் நடித்து ஹிட் கொடுத்தார். நான்கு ஆண்களுடன் வாழும் ஒரு பெண் நட்பாக பழகுவதை காதலர் சுரேஷ் தவறாகப் புரிந்து கொண்டு அவரை ஒதுக்கும் போது தன் இறுதியில் மீண்டும் நண்பர்களே போதும் என்ற முடிவுக்கு வருவது போல் அமைந்த இவரது கதாபாத்திரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
#image_title
மேலும் சித்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நிலையான ஓர் இடத்தையும் கொடுத்தது. இப்படத்தின் பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்திலும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது நடிகை சித்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சித்தாரா.
#image_title
அத்தோடு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புரியாத புதிர் என்று பல திரைப்படங்களிலும் அந்த நேரத்தில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் பெண் பார்க்கும்போது கூட நடிகை சித்தாரா மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவர்களும் ஏராளம். இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது ரீ எண்ட்ரி கொடுத்து அக்கா, அம்மா, என்று பல கேரக்டரில் இப்போ வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தற்போது 50 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார்.
#image_title
அதுமட்டுமல்லாமல் நடிகை சித்தாரா ஆரம்ப காலகட்டத்திலேயே தனக்கு கவர்ச்சியாக நடிப்பது வேண்டாம் என்று மறுத்து ஹோமிலியாகவே தொடர்ச்சியாக நடித்து வந்ததாலே இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இவருக்கு கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதிக பக்தி வந்திருக்கிறது. அதனாலேயே இவரும் ஒரு பெண் சாமியாராக மாறிவிட்டதாக சித்தாரா கூறியிருக்கிறார். இதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினாலும் அந்த காலத்தில் இவர் ஒருவரை காதலித்ததாகவும் அது கை கூடததால் தான் திருமணம் வேண்டாம் என ஒதுங்கி தனியாக வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
#image_title
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…