சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ஒன்று பிரியமானவள்.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியவர் சாந்தினி பிரகாஷ்.இந்த தொடரில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி,சுமங்கலி,பூவே பூச்சூடவா,

காற்றின் மொழி என பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சாந்தினி பிரகாஷ்.நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர தில்லுக்கு துட்டு,ஓடி ஓடி உழைக்கணும்,ஏமாளி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.அபி டெய்லர்,ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட தொடர்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சாந்தினி. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் வானத்தைப்போல சீரியலில் பொன்னி என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஸ்ரீ குமாருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இது ரீலா இல்ல ரியலா?’ என்று குழப்பத்தில் உள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
