நடிகை சாந்தினி முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து பிளஸ் டூ படத்தின் மூலம் சாந்தினி நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் சாந்தினி ஹீரோயினாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்து சாந்தினி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் எஸ் .ஜே சூர்யா நடித்த பொம்மை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தினி நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி கவர்ச்சியாக உடைய அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.